Skip to main content

இந்திரகோபம் (மூதாய் பூச்சி - செம்பட்டுப் பூச்சி)

(http://sangacholai.in/Essays-4.1.html)

இந்திரகோபம் என்பது ஒரு மிகச் சிறிய பூச்சி. சிவப்பு நிறம் உடையது. இதனைத் தம்பலப்பூச்சி என்றும் கூறுவர்.
இதனைக் கோபம் அல்லது கோவம் என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon)
இதனை cochineal என்று மொழிபெயர்க்கிறது. 
மயில்கள் உணவான இந்திரகோபமோ

மூதாய் பூச்சி (Red velvet mite) சிவந்த மென் பட்டு துணி வகை போன்ற நிறத்தை ஒத்த ஒரு பூச்சியாகும். இப்பூச்சி சிலந்திதேள் வகுப்பில் சேருகிறது. இவை பெரும்பாலும் காயா மலரின் கொத்து கொத்தான பூக்களுக்கிடையில் பெரிய பூச்சியானவுடன் ஒட்டிக்கொள்கிறது. இப்பூச்சி உலகிலேயே பெரிய ஒட்டு உண்ணிப்பூச்சியாகும்.

மகளிர் இளைப்பாறித் துயில்கொள்ளுதல்
821.
கொவ்வை நோக்கிய வாய்களை.
   இந்திர கோபம்
கவ்வி நோக்கின என்றுகொல் -
   காட்டு இன மயில்கள்.
நவ்வி நோக்கியர். நலம் கொள்
   மேகலை. பொலஞ் சாயல்-
செவ்வி நோக்கின திரிவன
   போல்வன. திரிந்த.
 
காட்டு     இன மயில்கள் - காட்டில்  வாழும் மயில் கூட்டங்கள்;
கொவ்வை நோக்கிய வாய்களை 
- கோவைப் பழம் போன்ற மகளிரின்
வாய்களை;  இந்திர கோபம்  -  இந்திர  கோபப்  பூச்சிகள்;  கவ்வி
நோக்கின  
-  சென்று  சேர்ந்து அடைக்கலமாகப் புக்கனவோ; என்று
கொல் 
-  என்று  நினைத்ததால்தானோ;  நலம்  கொள்  மேகலை -
அழகிய  மேகலையை  அணிந்த;  நவ்வி நோக்கியர் - மான் போன்ற
கண்களைப்  பெற்ற  பெண்களின்;  பொலஞ் சாயல் செவ்வி - சிறந்த
சாயல்  அழகை;  நோக்கின  - (எவ்வாறு உள்ளதென்று) பார்த்தவாறு;
திரிவன போல; திரிந்த - திரிந்தன.
 
மகளிரின்   வாய்கள் இந்திர கோபப் பூச்சிகள் போலிருத்தல் கண்ட
மயில்கள்  இவர்களின்  சாயல்   எவ்வாறு  உள்ளது  என்று  காணுதல்
பொருட்டும் தம் உணவான இந்திரகோபமோ என்று  ஐயுற்றும்.  திரிவன
போன்று  இருந்தன.  இந்திர   கோபம்:   செம்பட்டுப்  பூச்சி
. - ஏதுத்
தற்குறிப்பேற்ற   அணி.   மயில்    மகளிர்க்குச்   சாயலில்   உவமை
கூறப்படுவது  வழக்கமாதலால்.  வாய்களைப்  பற்றிக் கருதிய  மயில்கள்
சாயல்  அழகைக்  கருத்தோடு நோக்கத் திரிந்தன என்றார். வேறு உரை:
தாம்    கவர    வேண்டுமென்று    கொவ்வைப்பழம்    கருதியிருந்த
பெண்களின்     செவ்வாய்   அழகை   இந்திர    கோபப்   பூச்சிகள்
கவர்ந்துள்ளன  என்று   காட்டு  மயில்கள்  கருதியதால்தானோ  அந்த
இந்திரகோபங்களை  உண்ண  விரும்பித்   தாம்  அதற்காகத்  திரிவது
தோன்றாதவாறு  அப்பெண்களின்  சாயல்  அழகைக்  காணத்  திரிவன
போலத் திரிந்தன என்பது. 

போலத் திரிந்தன என்பது.                                    9 

Comments